விதவிதமான முகங்கள், வெவ்வேறு தொழில்களைச் செய்கிறவர்கள், பணக்காரர்கள், அன்றாடங்காய்ச்சிகள், கொழுத்தவர்கள், மெலிந்தவர்கள் எல்லாவகை மக்களையும் அங்கே பார்க்க முடிந்தது. அனைவரும் ஒரேமாதிரியாக உடுத்தியிருந்தார்கள், பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
யூதர்களைப் பொருத்தவரை, அது வெறும் சுவர் அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே இடத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த ஓர் ஆலயத்தின் அடையாள மிச்சம், அவர்களுடைய border=0 hspace=5 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-18/imagefolder/8a.jpg" width=235 height=177>மதத்தை ஒருங்கிணைத்த, கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிற புனிதச் சின்னம்.
ஜெருசலேம் நகரில் இந்த ஆலயத்தை அமைத்தவன், ஹெரோத் என்கிற யூத அரசன். அந்தக் காலத்தில் யூதர்களின் பெருமைக்குரிய புண்ணியத் தலமாக மதிக்கப்பட்ட கோயில் அது.
கி.பி. எழுபதாம் வருடம், அங்கே படையெடுத்து வந்த ரோமானியர்கள் இந்தக் கோயிலைத்தான் குறிவைத்துத் தாக்கினார்கள். உள்ளே இருந்த விலை மதிக்க முடியாத பொருள்களையெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு, ஆலயத்தையும் இடித்துவிட்டார்கள்.
இந்த அக்கிரமத்தைத் தடுப்பதற்கு யூதர்கள் எவ்வளவோ போராடினார்கள். ஆனால், ரோமானியப் படைகளின் வெறித்தனத்துக்கு முன்னால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்ணெதிரே அவர்களுடைய கம்பீரமான புனித அடையாளம் தகர்க்கப்பட்டுவிட்டது. கடைசியில் மிஞ்சியது இந்தச் சுவர் மட்டும்தான்.
அதன்பிறகு, உலகம் முழுக்க இருக்கிற யூதர்களுக்கு இந்தச் சுவர் வணக்கத்துக்குரிய மதச் சின்னமாகிவிட்டது. என்றைக்காவது இந்த ஆலயத்தை மீண்டும் கட்டித்தருவதற்கு ஒரு தேவதூதன் வருவான் என்று அவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
கோயில் இருக்கட்டும், அதற்கு முன்னால், அந்தச் சுவர் உள்ள நிலம் யாருக்குச் சொந்தம்? அங்கேதான் பிரச்னை.
ஜெருசலேம் நகரம் இருப்பது பாலஸ்தீனத்தில்.அங்கே பெரும்-பான்மையாக வாழ்வது அரேபியர்கள்தான்.
காலம்காலமாக அரேபியர்களின் தேசம் என்று அறியப்பட்டிருந்த பாலஸ்தீனத்திற்குள், அப்போது யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறிக் கொண்டிருந்தார்கள்.border=0 hspace=5 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-18/imagefolder/8b.jpg" width=235 height=182> இதைப் பார்த்த மண்ணின் மைந்தர்களுக்கு டென்ஷன். ஏதாவது சூழ்ச்சி பண்ணி யூதர்கள் தங்களுடைய நாட்டைச் சுருட்டிக்கொண்டுவிடுவார்களோ என்று பயப்பட ஆரம்பித்தார்கள்.
இதனால், பாலஸ்தீனத்தில் நாலு யூதர்கள் சேர்ந்து உட்கார்ந்து டீ சாப்பிட்டால்கூட, அவர்கள் ஏதோ சதி பண்ணுகிறார்களோ என்று அரேபியர்களுக்கு வயிற்றைக் கலக்கியது, `இந்தப் பயலுங்களைக் கொஞ்சம் தட்டிவைக்கணும், இல்லாட்டி முதலுக்கே மோசமாயிடும்' என்று பேசத் தொடங்கினார்கள்.
அரேபியர்களின் இந்தப் பாதுகாப்பில்லாத உணர்வினால் (Insecurity) அப்போது பாலஸ்தீனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி யூதர்களுக்குக்கூட ஆபத்து வந்து சேர்ந்தது. `நல்லவன், கெட்டவன் என்றெல்லாம் பார்க்காதே, யூதனா? போட்டுத் தள்ளு' அவ்வளவுதான்!
இப்படித்தான், அன்றைக்கு ஜெருசலேம் புனிதச் சுவரின் முன்னால் வழிபாட்டுக்காகக் கூடியிருந்த யூதர்கள்மீது, திடீர்த் தாக்குதல் தொடங்கியது. எங்கிருந்தோ கற்கள், கட்டைகள், பாட்டில்கள், மற்ற `இன்ஸ்டன்ட்' ஆயுதங்கள் பறந்து வந்தன. பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பல யூதர்கள் அடிபட்டுச் சாய்ந்தார்கள்.
ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் புரியவில்லை. அப்புறம் சுதாரித்துக்கொண்ட சில இளைஞர்கள் அடிபட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள். மிச்சமிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினார்கள்.
கொஞ்ச நேரத்துக்குள், அடித்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். புனிதச் சுவருக்கு முன்னால் இருந்த பகுதி போர்க்களம்போல் மாறியிருந்தது. சற்றும் எதிர்பாராத தாக்குதலால், ஏகப்பட்ட யூதர்களுக்குக் காயம்.
இங்கே மட்டுமில்லை, பாலஸ்தீனம் முழுக்கவே யூதர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. ஒரு சின்ன வதந்திகூடப் போதும், அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் நடுவே நெருப்புப் பற்றிக்கொண்டுவிடும். அப்புறம் சண்டையில் எந்தப் பக்கம் எத்தனை உயிர் போகுமோ, கணக்கே இல்லை.
1929 ஆகஸ்ட் 23-ம் தேதி, யூதர்களின் புனித நகரங்களில் ஒன்றான ஹெப்ரானில் பெரிய கலவரம். ஐம்பதுக்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்தத் தகவல், அதிவேகத்தில் எல்லா நகரங்களுக்கும் பரவியது. இங்கே யூதர்கள் அரேபியர்களைக் கொல்கிறார்கள். அங்கே அரேபியர்கள் யூதர்களைக் கொல்கிறார்கள். இறந்துபோனவர்கள் எண்ணிக்கை இருநூறு, ஐநூறு, ஆயிரம் என்று விதவிதமான வதந்திகள் பீதியூட்டின.
இதனால், பாலஸ்தீனம் முழுக்கக் கலவரச் சூழல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற தெருக்கள், ஏரியாக்கள் எல்லாவற்றிலும் வன்முறை வெடித்துக் கொண்டிருந்தது, ஏகப்பட்ட உயிர்ச் சேதம், பொருள் சேதம்.
பதறிப்போன யூதர்கள், ஒரு முடிவெடுத்தார்கள். `இனிமே தனித்தனியா சண்டை போடறது சரிப்படாது, நம்மைப் பாதுகாத்துக்கணும்னா, கும்பலா மோதறதுதான் புத்திசாலித்தனம். இல்லாட்டி, இந்தப் பாலஸ்தீன மண்ணில யூதர்களோட அடையாளமே இல்லாதபடி அழிச்சுடுவாங்க.'
முதலில், நாம் ஏன் இத்தனை அடி வாங்குகிறோம்? பாலஸ்தீனர்களை எதிர்த்துப் போராட நமக்கு தைரியம் இல்லையா? ஆள் பலம், ஆயுதம் இல்லையா?
எல்லாம் இருக்கிறது. ஆனால், அவர்கள் எப்போது அடிப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. குடும்பத்தோடு, நண்பர்களோடு ஜாலியாக ரிலாக்ஸ் செய்துகொண்டிருக்கும்போது, பிரார்த்தனை செய்யும்போது, ராத்திரிச் சாப்பாட்டுக்கு உட்கார்கிற நேரத்திலெல்லாம் எதிர்பாராமல் தாக்க ஆரம்பித்தால் நம்மால் என்ன செய்யமுடியும்?
ஆக, இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஒரே வழிதான்: அரேபியர்கள்மீது நிரந்தரமாக ஒரு கண் வைக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கட்டையைத் தூக்குவதற்கு முன்னால், நாமும் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகிவிட வேண்டும்.
ஆனால், அரேபியர்களின் திட்டங்களை நாம் எப்படித் தெரிந்து கொள்வது?
கஷ்டம்தான். ஆனால், கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயமாக முடியும்.
யூதர்கள் இதற்காக நிதி திரட்ட ஆரம்பித்தார்கள். அந்தப் பணத்தை எந்த வழிகளில் செலவு செய்ய வேண்டும், யாரை எப்படிப் பயன்படுத்தி என்னென்ன தகவல்களைச் சேகரிக்கவேண்டும் என்றெல்லாம் யோசித்தார்கள். அவர்களுடைய முதல் உளவுத்துறை உருவாகிவிட்டது.
என்னதான் பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் சண்டை தூள் பறந்தாலும், `யூதர்கள் என்ன பாவம் செஞ்சாங்க? அவங்களும் நம்மோட border=0 hspace=5 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-18/imagefolder/8c.jpg" width=136 height=211>இருந்துட்டுப் போகட்டுமே' என்று சொல்கிற அரேபியர்கள் சிலர் இருந்தார்கள். யூதர்கள் அவர்களுடைய உதவியைப் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீனர்கள் மத்தியில் ஊடுருவ ஆரம்பித்தார்கள்.
இதுதவிர, சில பாலஸ்தீனர்களுக்குக் காசு கொடுத்து ஆசை காட்டினார்கள். `எப்போ, எங்கே, எப்படித் தாக்குதல் நடக்கப்போகுதுன்னு விவரம் சொல்லு, துட்டு தர்றோம்.'
இந்தக் `கையில தகவல், வாயில தோசை' திட்டம் பிரமாதமாக வேலை செய்தது. இதன்மூலம் பல தாக்குதல்களை யூதர்கள் முன்கூட்டியே தெரிந்துகொண்டு பாலஸ்தீனர்களுக்குப் பதிலடி கொடுத்தார்கள்.
பாலஸ்தீனர்களுக்கு எரிச்சல். நம் ஊரில் வந்து உட்கார்ந்துகொண்டு நம்மையே எதிர்க்கிறார்களே என்று யூதர்கள்மீது இன்னும் ஆவேசத்துடன் மோதினார்கள்.
பாலஸ்தீனர்களின் கோபத்தில் நியாயம் இருந்தது. அப்போது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், யூதர்களுக்கும் அங்கே சம உரிமை உண்டு என்பதுபோல் நடந்து கொண்டது. இது அரேபியர்களுக்குப் பிடிக்கவில்லை, `இது எங்களுடைய பூமி. மைனாரிட்டிகளான யூதர்களை எப்படி எங்களுக்குச் சமமாக நடத்தலாம்?' என்று கொதித்தார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், பாலஸ்தீன மண் வருங்காலத்தில் யாருக்குச் சொந்தமாகப் போகிறது என்கிற விஷயத்தில் அரேபியர்கள், யூதர்கள் இருதரப்பினருக்கும் பயம் வந்துவிட்டது. அவர்கள் ரொம்பக் காலம் சேர்ந்து வாழமுடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
யூதர்கள் யோசித்தார்கள். இப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்து அரேபியர்கள் அடங்கியிருக்கிறார்கள். நாளைக்கே ஏதாவது பிரச்னை வந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியேறிவிட்டால் நமக்கு யார் பாதுகாப்பு?
வேறு வழியே இல்லை. நம் உளவுத்துறையை இன்னும் வலுவாக்க வேண்டும், நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளவேண்டும், இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு பணமும் செலவழிக்கலாம்!
கஜானாவில் காசு, ராணுவம், ஆயுத பலத்தையெல்லாம்விட, எதிராளியைப்பற்றிய தகவல்கள்தான் முக்கியமானவை என்பதை யூதர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதன்பிறகு, அவர்களுடைய போர்த் தந்திரங்களே மாறிவிட்டன, அதுவரை நேரடி யுத்தத்தில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தவர்கள், இப்போது பின்னணியில் ரகசியமாக வேட்டு வைக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள்.
அப்போது யூதர்கள் கற்றுக்கொண்ட உளவுத்துறைப் பாடங்கள்தான், இன்றுவரை அவர்களுக்குப் பெரிய பலமாக இருக்கின்றன. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எதிரியைப்பற்றிய தகவல்களைத் திரட்டுவது, பிறகு அதெல்லாம் சரியான விவரங்கள்தானா, அல்லது உட்டாலக்கடியா என்று உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள், நம் படைக்குள் எதிராளி ஊடுருவாதபடி பார்த்துக்கொள்வது, தவறிப்போய் யாராவது உள்ளே வந்துவிட்டாலும், அவர்கள்மூலமே தவறான தகவல்களை அந்தப் பக்கம் பரப்பிவிட்டு விளையாடுவது, நம்முடைய பலம் ஒன்று என்றால், அது நூறு, ஆயிரமாகத் தெரியும்படி மாயத் தோற்றங்களை உருவாக்கி மிரட்டுவது என்று யூதர்களின் உளவு பலம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருந்தது.
யூதர்களின் அதிர்ஷ்டம், இதுமாதிரி கில்லாடித்தனமான வேலைகளைச் செய்வதற்கு ஏகப்பட்ட இளைஞர்கள் முன்வந்தார்கள். உளவுப் பணியில் இருக்கும் ரகசியத்தன்மை, த்ரில் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அடிப்படை விஷயங்களை முனைப்புடன் கற்றுக் கொண்டார்கள், புதுசாக யோசித்து வித்தியாசமாகச் செயல்பட்டு யூதர்களுடைய உளவுத்துறையை `எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்'களாக மாற்றினார்கள்.
இந்த இளைஞர் படைதான், பின்னர் இஸ்ரேல் தேசத்துக்கும், அதன் உளவுத்துறையாகிய மொஸாட்டுக்கும் பலமான அஸ்திவாரமாக அமைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment