Tuesday, November 24, 2009

kps 2009-10-15

color=#ff0000 size=6>ஒcolor=#9900cc>ருவழியாக, அடால்ஃப் ஐக்மெனைப் பிடித்துவிட்டோம். இனிமேல், அவரைப் பேசவைப்பது எப்படி?

முரண்டு பிடிக்கிறவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கு நிறைய உத்திகள் இருக்கின்றன. அன்பாகச் சொல்லலாம், ஆசை காட்டலாம், இரண்டுக்கும் பணியாவிட்டால், மிரட்டலாம், அடிக்கலாம், போதை ஊசி போட்டு அரை மயக்கத்தில் நிஜத்தைக் கக்கவைக்கலாம்.
border=0 hspace=10 vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-15/imagefolder/8a.jpg">
ஆனால், இதெல்லாம் ஒன்றரையணா கிரிமினல்களிடம் பயன்படும். அடால்ஃப் ஐக்மென் மாதிரி அயோக்கிய சிகாமணி அத்தனை சுலபத்தில் மசிந்துவிடுவானா? ரஃபி எய்டனுக்குச் சந்தேகமாகவே இருந்தது.

ஆகவேதான், அவர் கொஞ்சம் வித்தியாசமான ஒரு வழியைப் பயன்படுத்தினார்: ஐக்மெனைத் தனிமையில் தள்ளிவிடுவது, அவரிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், மிரட்டாமல், அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயத்திலேயே அவரைக் குழப்பியடிப்பது, நடுங்கச்செய்வது, இப்படி அவருடைய மனத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் தகர்த்துவிட்டால், வேறு வழியில்லாமல் பார்ட்டி உளற ஆரம்பித்துவிடும்.

முந்தின நாள் இரவு ஐக்மெனைக் கடத்தியதுமுதல், இஸ்ரேல் உளவாளிகள் யாரும் அவரிடம் பேசவில்லை. `பல லட்சம் யூதர்களை இரக்கமற்றுக் கொன்று குவித்த நீசனே, உன்னை என்ன செய்கிறோம் பார்' என்று வீர வசனம் கிடையாது. `நீ செய்த அக்கிரமத்துக்கெல்லாம் தெய்வம் சரியானborder=0 hspace=10 vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-15/imagefolder/8b.jpg"> தண்டனை கொடுத்துவிட்டது' என்று உணர்ச்சிவயப்படவில்லை. `மவனே, என்னா ஆட்டம் ஆடினே, இப்ப உன்னை யார் காப்பாத்துவாங்க?' என்று முகத்தில் இடிக்கவில்லை. எதற்காக இந்தக் கடத்தல், அடுத்து அவரை எங்கே கொண்டுசெல்லப்போகிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று எந்த விவரமும் அவருக்குத் தெரிந்துவிடாதபடி மூடிய அறைக்குள் தனியே குழம்பவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் இதனை ‘Psychological Torture’என்று சொல்வார்கள். எப்பேர்ப்பட்ட வலுவான மனிதனையும், இப்படி அடுத்து என்ன என்று தெரியாதபடி தவிக்கவிட்டால் அவனுடைய மனமும் உடலும் சோர்ந்துபோய்விடும். அதன்பிறகு அவனைப் பேசவைப்பது சுலபம்.

ராத்திரி முழுக்கச் சங்கிலிகளில் கட்டிப் போடப்பட்டிருந்த ஐக்மெனை, மறுநாள் காலை வெளியே கொண்டுவந்தார்கள். அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டார்கள், `உன் பேர் என்ன?'

`ரிகார்டோ க்ளெமென்ட்.'

`அது இப்போ நீ வெச்சுகிட்ட பேர், அதுக்கு முன்னாடி?'

சட்டென்று பதில் வந்தது, `அடால்ஃப் ஐக்மென்.'

அவ்வளவுதான். மறுபடியும் அவர், அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டார்.

அடுத்த ஒரு வாரத்துக்கு, அந்த வீட்டில் இருந்த யாரும் ஐக்மெனுடன் பேசவில்லை. வேளாவேளைக்குச் சாப்பாடு தருவார்கள், வேறு ஏதாவது கேட்டால் கொண்டுவருவார்கள். மborder=0 hspace=10 vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-15/imagefolder/8c.jpg">ற்றபடி அவரை அடிப்பதோ, உதைப்பதோ. மிரட்டுவதோ கிடையாது. யூதர்களின் மிகப் பெரிய விரோதி எதிரில் இருக்கிறான் என்று தெரிந்தும்கூட, அந்த இஸ்ரேலியர்கள் தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு மௌனமாக இருந்தார்கள்.

காரணம், அவர்களுடைய கடமை இன்னும் முடியவில்லை. அடால்ஃப் ஐக்மெனைக் கடத்தினால்மட்டும் போதாது, அர்ஜென்டினா போலீஸுக்கோ, அரசாங்கத்துக்கோ தெரியாதபடி அவரைப் பத்திரமாக இஸ்ரேலுக்குக் கொண்டுசெல்ல வேண்டும், நீதிமன்றத்தின்முன் நிறுத்த வேண்டும்.

சென்னையில் இருக்கிற ஒருவரை மதுரைக்குக் கடத்தவேண்டுமென்றால், ஒரு வண்டி போதும். ஆனால் அதே பார்ட்டியை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் ரொம்பக் கஷ்டம். பாஸ்போர்ட், விசா, இன்னும் என்னென்னவோ ஆவணங்கள் தேவைப்படும், ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

மொஸாட் இதுமாதிரியான காகிதச் சடங்குகளில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அடால்ஃப் ஐக்மெனை அவர்கள் பிடித்துவைத்திருக்கிற விஷயம் தெரிந்தால், உடனடியாக அர்ஜென்டினா அரசாங்கம் உஷாராகிவிடும். அங்கிருந்து காக்கா, குருவிகூட வெளியே பறக்கமுடியாதபடி வேலி போட்டுவிடுவார்கள்.border=0 hspace=10 vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-15/imagefolder/8d.jpg">

ஆனால், இந்தக் கடத்தலைப்பற்றி ஆயிரம் விஷயம் யோசித்த மொஸாட், இதைமட்டும் விட்டுவைப்பார்களா? அதற்கும் கச்சிதமாக ஒரு திட்டம் உருவாக்கியிருந்தார்கள்.

அடால்ஃப் ஐக்மென் கடத்தப்பட்டு பத்து நாள் கழித்து, அவருக்கு ஒரு புதிய ஆடை அணிவிக்கப்பட்டது: விமான அதிகாரி யூனிஃபார்ம்!

இந்தப் பத்து நாட்களுக்குள், ஐக்மென் மனதளவில் ரொம்பத் தளர்ந்திருந்தார். தப்பிக்கமுடியும் என்கிற நம்பிக்கை சுத்தமாக மறைந்திருந்தது. தன்னைக் கடத்தியவர்கள் எது சொன்னாலும் மறுபேச்சு இல்லாமல் ஒத்துழைக்க ஆரம்பித்திருந்தார்.

அடால்ஃப் ஐக்மென் விமான அதிகாரி சீருடையை அணிந்துகொண்டதும், அடுத்த ஸ்பெஷல் ஐட்டம் வந்தது: ஒரு பாட்டில் விஸ்கி!

யூனிஃபார்ம் சரி, விஸ்கி எதற்கு? ஒருவேளை, விஸ்கியில் விஷம் கலந்திருக்குமோ?

யாரும் பதில் சொல்லவில்லை, `பேசாமல் குடி' என்றுமட்டும் சைகை காட்டினார்கள்.

ஏதோ, இந்தமட்டும் புண்ணியவான்கள் அடி, உதை கொடுக்காமல் இலவசமாகச் சரக்கு ஊற்றித் தருகிறார்கள். நாளைக்கு இஸ்ரேல் போனபிறகு உடம்பில் உயிர் இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை, சாகிற நேரத்தில் இந்தச் சந்தோஷமாவது மிஞ்சட்டுமே. மொத்தத்தையும் குடித்துமுடித்தார் ஐக்மென்.

அவர் போதையில் கண் செருகிக்கொண்டிருக்கும்போது, மொஸாட் ஏஜெண்ட்களும் அதே மாதிரியான விமான அதிகாரி யூனிஃபார்ம்களை அணிந்துகொண்டார்கள். விஸ்கி பாட்டிலைத் திறந்து, பன்னீர்போல தாராளமாக மேலே தெளித்துக்கொண்டார்கள்.

இப்போது, அவர்கள் எல்லோர்மீதும் காத்திரமான விஸ்கி வாடை. திருப்தியாகத் தலையாட்டினார் ரஃபி எய்டன்.

சில நிமிடங்கள் கழித்து, அவர்களுடைய கார் விமான நிலையத்துக்குள் நுழைந்தது. பாதுகாப்புப் பரிசோதனைக்காக வண்டியை நெருங்கிய காவலர்கள், சட்டென்று மூக்கைப் பொத்திக்கொண்டார்கள். `இதென்ன காரா, இல்லை சாராய வண்டியா?'

`ஸாரி, இன்னிக்குக் கொஞ்சம் ஜாஸ்தி ஊத்திக்கிட்டோம்' என்றார் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர். `உங்க ஊர் விஸ்கி ரொம்ப ஸ்ட்ராங்க், எங்களால தாங்கமுடியலை.'

இதைக் கேட்டதும், அந்த ஊர்க் காவலர்கள் பெருமையுடன் சிரித்தார்கள். `பின்னே? அர்ஜென்டினா சரக்குன்னா சும்மாவா?'

இந்தக் களேபரத்தில், அவர்கள் யாரும் அடால்ஃப் ஐக்மெனைக் கவனிக்கவில்லை. `இனிமேலாவது கொஞ்சம் பார்த்துக் குடிங்கப்பா' என்று பொதுவாக அட்வைஸ் பண்ணி வழியனுப்பிவிட்டார்கள்.

உள்ளே ஐக்மெனுக்காக ஓர் இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் விமானம் காத்திருந்தது. அரை மயக்க நிலையிலேயே அவரை மேலே ஏற்றி யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைத்துவிட்டார்கள்.

அப்போதும், மொஸாட் ஏஜெண்ட்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை. எந்த நேரத்தில் மறுபடி போலீஸ் வருமோ என்று கொஞ்சம் திகிலோடுதான் உட்கார்ந்திருந்தார்கள்.

ஆனால், அவர்கள் நினைத்ததுபோல் எந்த திடீர்ப் பரிசோதனையும் நடக்கவில்லை. விஸ்கி நாடகம் பிரமாத மாக வேலை செய்திருந்தது.

சிறிது நேரத்தில், அவர்களுடைய விமானம் புறப்பட்டது. பல வாரங்களுக்குப் பிறகு முதல்முறையாக மொஸாட் ஏஜெண்ட்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

இரண்டு நாள் கழித்து, இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்குரியன் அந்த நாட்டுப் பாராளுமன்றத்தில் பெருமையுடன் அறிவித்தார், `நாங்கள் அடால்ஃப் ஐக்மெனைக் கைது செய்துவிட்டோம்.'

ஹிட்லர் காலத்துக்குப் பிறகு காணாமலே போய்விட்ட ஐக்மெனை மறுபடி கண்டுபிடித்துக் கைது செய்தது பெரிய விஷயம்தான். ஆனால், அதற்காக மொஸாட் நடத்திய கடத்தல் நாடகமெல்லாம் வெளியே தெரிந்தபோது, அது பெரிய பிரச்னையாகிவிட்டது.

உடனடியாக, அர்ஜென்டினா அரசாங்கம் பெரிய எழுத்துகளில் அலறியது, `இது மனித உரிமை மீறல். எங்கள் எல்லைக்குள் வந்து, எங்கள் நாட்டுக் குடிமகன் ஒருவரைக் கடத்தியிருக்கிறீர்கள். ஒழுங்காக ஐக்மெனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.'

`ம்ஹூம், சான்ஸே இல்லை' என்றது இஸ்ரேல் அரசாங்கம். `அவர்மீது முறைப்படி வழக்கு நடத்துகிறோம். ஐக்மென் தப்புச் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால், அதற்கு ஏற்ப தண்டனை கொடுப்போம்.'

சொன்னபடி, அடால்ஃப் ஐக்மெனை நீதிமன்றத்தின்முன் நிறுத்தியது இஸ்ரேல். அவரை ஒரு குண்டு துளைக்காத கூண்டுக்குள் பத்திரமாக உட்காரவைத்துவிட்டு, ஹிட்லர் ஆட்சியின்கீழ் அவர் செய்த அக்கிரமங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் புட்டுப்புட்டு வைத்தார்கள்.

சென்ற நூற்றாண்டின் மிகப் பிரபலமான வழக்குகளில் ஒன்று அது. லட்சக்கணக்கான அப்பாவி யூதர்களுக்கு ஐக்மென் செய்த கொடுமைகளெல்லாம் வெளியே தெரிந்தபோது, `இப்படியெல்லாம்கூட ஒரு மனிதனால் கொடூரமாக யோசிக்க முடியுமா' என்று உறைந்துபோனது உலகம்.

அடால்ஃப் ஐக்மென் எதையும் மறுக்கவில்லை. ஆனால், `இதெல்லாம் நான் விரும்பிச் செய்தது இல்லை, யாரோ அதிகாரிகள் சொன்னார்கள், நான் நிறைவேற்றினேன், அவ்வளவுதான்' என்று கதையைத் திருப்பிப்போட்டார்.

ஆனால், இந்தக் கடைசி நேர நாடகம் பலிக்கவில்லை. பல லட்சம் யூதர்களின் மரணத்துக்கு அடால்ஃப் ஐக்மென் நேரடிக் காரணமாக இருந்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. நீதிபதிகள் அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள்.

ஐக்மென் கடத்தல் விவகாரத்துக்குப் பிறகு உளவுத்துறையினர் மத்தியில் மொஸாட்டின் இமேஜ் கன்னாபின்னாவென்று எகிறிவிட்டது. பின்னே? தங்களுக்கு முன்பின் பரிச்சயமே இல்லாத ஒரு வெளிநாட்டுக்குப் போய், ரகசியமாக ஒரு நபரைக் கடத்திக் கொண்டுவருவது என்றால் சாதாரண விஷயமா? இன்றைக்கு அர்ஜென்டினா அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவியவர்கள், நாளைக்கு இன்னும் எங்கெங்கே என்னென்னவெல்லாம் செய்வார்களோ? பல நாடுகள் மொஸாட்டைப் பிரம்மிப்புடனும், கொஞ்சம் பயத்துடனும் பார்க்க ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment