Tuesday, November 24, 2009

kps2009-11-15

color=#cc0000>size=6>கங்க்ராஜுலேஷன்ஸ் ஜெனரல்!' யாரோ ஜ்வி ஜமீரின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் குலுக்கினார்கள், `உங்க நாட்டுக்குத் திரும்பிப் போனதும் எங்களையெல்லாம் மறந்துடுவீங்கதானே?'

ஜெனரல் ஜ்வி ஜமீர் நாசூக்காகச் சிரித்தார். `நானும் எவ்வளவு நாளைக்குத்தான் ஆர்மி யூனிஃபார்ம்லயே காலம் தள்ளமுடியும்?'

அப்போது ஜ்வி ஜமீருக்கு வயது நாற்பத்து சொச்சம். நிச்சயமாக ரிடையராகிற வயது இல்லை.

`ஊருக்குப் போய் என்ன செய்யப்போறீங்க ஜெனரல்?'

'டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ்' என்றார் ஜ்வி ஜமீர்.

அவர் இப்படிச் சொன்னதும், அங்கிருந்த பலருக்கு ஆச்சரியம். ஒரு ராணுவ அதிகாரி, அதுவும் ஜ்வி ஜமீர்போலச் சுறுசுறுப்பான பேர்வழியால் எப்படி ஜவுளித் தொழிலுக்குள் முடங்கிக் கிடக்க முடியும்? நம்பமுடியவில்லையே!

அவர்கள் சந்தேகப்பட்டது சரிதான். இஸ்ரேல் வட்டாரங்களில், `டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ்' என்றால், `ரகசியம்' என்று அர்த்தம்.

இந்த விஷயம் தெரிந்தவர்கள், தங்களுக்குள் குறும்பாகச் சிரித்துக்கொண்டார்கள், `ஜ்வி ஜமீர் இஸ்ரேலில் ஏதோ விவகாரமான வேலையில் இறங்கப்போகிறார், இந்த மக்குப் பயல்களுக்கு அது புரியவில்லை, அவர் சட்டை, பேண்ட், சல்வார் கமீஸ் வியாபாரம் செய்யப்போவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்!'

சில நாள் கழித்து, ஜ்வி ஜமீர் லண்டனில் இருந்து இஸ்ரேல் வந்து சேர்ந்தார். மொஸாட்டின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

உடனடியாக, அவருக்கு அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்தது, `எங்களுக்கு இருநூறு டன் மஞ்சள் கேக் வேணும், ஏற்பாடு செய்யுங்க.'
`மஞ்சள் கேக்'கா? அது என்ன? ஏதாவது சாப்பிடுகிற சமாசாரமா? அதற்கும் மொஸாட் தலைவர் ஜ்வி ஜமீருக்கும் என்ன சம்பந்தம்? அரசாங்கத்துக்கு இருநூறு டன் கேக் செய்து தர அவர் என்ன பேக்கரியா நடத்துகிறார்?

`டெக்ஸ்டைல்ஸ்' போலவே, `மஞ்சள் கேக்'கும் ஒரு ரகசியக் குறியீடுதான். அறிவியல் மொழியில் இதை `யுரேனியா' என்று சொல்வார்கள். இதிலிருந்து `யுரேனியம்' எனப்படும் அணு ஆராய்ச்சிக்கான 'பவர்ஃபுல்' மூலப்பொருளைப் பிரித்தெடுக்க முடியும்.

கொஞ்சம் நமக்குப் புரியும்படி சொல்வதென்றால், தங்கத்தை எப்படி பூமியிலிருந்து வெட்டி எடுக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

மண்ணைத் தோண்டி எடுக்கப்படுகிற தங்கத் தாது, தகதகவென்று மின்னாது. அதனுடன் மண், ஏகப்பட்ட அசுத்தங்கள் கலந்து இருக்கும். இதையெல்லாம் பல்வேறு ரசாயன முறைகளில் சுத்தப்படுத்தி, ஜொலிக்கும் தங்கக் கட்டிகளாக மாற்றுகிறார்கள்.

யுரேனியமும் அப்படித்தான். இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத் தாதுவைப் பல வழிகளில் சுத்திகரித்து `யுரேனியா', அதாவது `மஞ்சள் கேக்'காக மாற்றவேண்டும். பிறகு இதிலிருந்து சுத்தமான யுரேனியம் பிரித்தெடுக்கப்படுகிறது.

அதாவது, முதலில் யுரேனியத் தாது, அதிலிருந்து மஞ்சள் கேக், அதிலிருந்து யுரேனியம், அதிலிருந்து அணுகுண்டு, ஓகேயா?

கெமிஸ்ட்ரி பாடம் போதும். மறுபடி மொஸாட் சமாசாரத்துக்குத் திரும்புவோம்.

இஸ்ரேலுக்கு எதற்கு மஞ்சள் கேக்? அதுவும் இருநூறு டன்?

இந்தக் கேள்விக்கு, இன்னொரு கேள்விதான் பதில்: பயில்வான்கள் வாழும் காலனியில், ஒரு நோஞ்சான் பையன் குடிவந்தால், அவனுடைய கதி என்ன ஆகும்?

அன்றைக்கு இஸ்ரேலின் நிலைமை அப்படித்தான் இருந்தது. சுற்றியுள்ள மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இஸ்ரேலின் ராணுவ பலம் குறைவு. இவர்கள் தனித்தனியாகச் சண்டைக்கு வந்தாலே சமாளிப்பது சிரமம். எல்லோரும் கூட்டுச் சேர்ந்துவிட்டால், அவ்வளவுதான். இஸ்ரேலைக் கொத்துபரோட்டா போட்டுவிடுவார்கள்.

இஸ்ரேல் யோசித்தது, `நாம இப்படி நோஞ்சானா இருக்கறதாலதானே எல்லாரும் சீண்டிப் பார்க்கறாங்க? நம்ம கையில கத்தி இருக்கு, துப்பாக்கி இருக்கு, வெடிகுண்டு இருக்குன்னு தெரிஞ்சா, அப்புறம் அநாவசியமா வாலாட்டமாட்டாங்கதானே?'

உடனடியாக, தன்னுடைய ஆயுத பலத்தை அதிகரிக்க ஆரம்பித்தது இஸ்ரேல். நட்பு நாடுகளின் உதவியுடன் நவீன குண்டெறி விமானங்கள், பீரங்கிகள், போர்க் கப்பல்கள், துப்பாக்கிகள், வெடிபொருள்கள் என்று ஏகப்பட்ட சமாசாரங்களை வாங்கிக் குவித்தார்கள்.

இதனால், வேறொரு பெரிய பிரச்னை முளைத்தது. இவர்களுக்கு ஆயுத சப்ளை செய்யும் `தாதா'க்கள், பதிலுக்கு இஸ்ரேல் தங்களுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். `எங்களை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா, அப்புறம் உங்களுக்கு ஆயுதம் தரமாட்டோம்' என்று மிரட்டினார்கள்.

தவிர, இஸ்ரேல் வாங்கிச் சேர்க்கிற ஆயுதங்கள் எல்லாமே, அக்கம் பக்கத்துப் பங்காளிகளிடமும் நிறைய இருக்கின்றன. அவர்களை விஞ்சி இஸ்ரேல் பெரிய ஆளாகவேண்டுமென்றால், அந்த நாடுகளிடம் இல்லாத ஒரு பிரம்மாஸ்திரம் இஸ்ரேலுக்கு வேண்டும்.
border=0 hspace=5 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-15/imagefolder/07a.jpg" width=150 height=136>
இப்படி இஸ்ரேல் தேர்ந்தெடுத்த பிரம்மாஸ்திரம், அணுகுண்டு!

இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான்மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியிருந்தது. ஹிரோஷிமா, நாகசாகியில் அந்தக் குண்டுகள் ஏற்படுத்திய பேரழிவைப் பார்த்து, ஒட்டுமொத்த உலகமும் கலங்கிப்போயிருந்தது.

ஜஸ்ட் இரண்டு குண்டுகளால் இப்படிச் சர்வநாசம் விளைவிக்க முடியும் என்றால், நாளைக்கு எல்லா நாடுகளும் ஒருவர்மேல் மற்றவர் அணுகுண்டு வீச ஆரம்பித்தால் என்ன ஆகும்? சில நாட்களுக்குள் இந்தப் பூமியே சுடுகாடாக மாறிவிடாதா?

ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களுக்குப் பிறகு, சர்வதேச அளவில் அணு ஆராய்ச்சிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா தொடங்கி அண்டார்டிகா வரை எங்கேயாவது யாராவது ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கிறார்களா என்று துப்பறிவதற்காகவே பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அணு ஆராய்ச்சிக்குப் பயன்படுகிற வேதிப்பொருள்களைத் தயாரிப்பது, விற்பனை செய்வது கடுமையாகக் கண்காணிக்கப்பட்டது. இவற்றையும் மீறி ஒரு நாடு அணுகுண்டு தயாரித்தால், அதன்மீது பொருளாதாரத் தடைகளை விதித்து நாஸ்தி பண்ணிவிடுவோம் என்று மிரட்டினார்கள்.

ஆனால், இஸ்ரேல் அப்போது இருந்த நிலைமையில், இந்த மிரட்டலெல்லாம் அவர்களிடம் எடுபடவில்லை. அக்கம்பக்கத்துப் பயில்வான்களைச் சமாளிக்க வேண்டுமென்றால், நமக்கு நிச்சயமாக அணு ஆயுதங்கள் வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள்.

இதற்காக, டிமோனோ என்ற இடத்தில் ஓர் அணு ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட்டது. அக்கம்பக்கத்திலிருந்து யாரும் அதை நெருங்கிவிடாதபடி பக்காவாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து முடித்தார்கள்.

ஆனால், எப்படியோ இந்த விஷயம் வெளியே கசிந்துவிட்டது. உஷாரான அமெரிக்கா, தன்னுடைய உளவு விமானம் ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியது. டிமோனோ மீது பறந்து சென்ற இந்த விமானம், விசேஷ கேமராவின்மூலம் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தது.

இந்த போட்டோக்களைப் பார்த்தபோது, இஸ்ரேல் ஓர் அணு ஆராய்ச்சி நிலையம் அமைத்திருப்பது உறுதியாகிவிட்டது. உடனே, அமெரிக்காவுக்கு டென்ஷன், `அணு ஆயுதம் தயாரிக்கிற வேலையெல்லாம் வேணாம். ஒழுங்கா டிமோனோவை இழுத்து மூடுங்க' என்று இஸ்ரேலை மிரட்டினார்கள்.

அப்போதும், இஸ்ரேல் அசரவில்லை, `நாங்கள் அணு ஆராய்ச்சி செய்வது உண்மைதான். ஆனால், அதை வைத்து அணுகுண்டு தயாரிக்கமாட்டோம், தொழில் வளர்ச்சி, விவசாயம், மருத்துவத்துறை முன்னேற்றங்களுக்கு மட்டுமே அணுசக்தியைப் பயன்படுத்துவோம்' என்று அறிவித்தார்கள்.
அவர்கள் சொன்னதை யாரும் நம்பவில்லை. இஸ்ரேல் அணுகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கிற தகவல்(?) உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு ஒரே ஒரு நிம்மதி, இஸ்ரேல் என்னதான் பெரிய சைஸ் அணு ஆராய்ச்சி நிலையம் கட்டிவிட்டாலும், அங்கே அவர்கள் அணுகுண்டு தயாரிக்க விரும்பினால், அதற்கு ஏகப்பட்ட மூலப்பொருள்கள் தேவை. அதையெல்லாம் வெளி மார்க்கெட்டில் யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து வாங்கிவிட முடியாது, நிறையக் கட்டுப்பாடுகள், தடைகள் உண்டு. அத்தனையையும் விஞ்சி, அணுகுண்டு செய்வதற்கான பொருள்களை இஸ்ரேலால் திரட்டமுடியாது என்று கணக்குப் போட்டது அமெரிக்கா.

இஸ்ரேலுக்கும் இந்த விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனாலும், எப்படியாவது எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு, அணுகுண்டு ஆராய்ச்சிக்குத் தேவையான `மஞ்சள் கேக்'குகளை வாங்கிவிடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இந்தப் பொறுப்பு மொஸாட் தலைவர் ஜ்வி ஜமீரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதலில், உலகம் முழுக்க மஞ்சள் கேக் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று விசாரிக்க ஆரம்பித்தது மொஸாட். இந்த லிஸ்டை உன்னிப்பாக ஆராய்ந்து, பெல்ஜியத்தில் ஒரு கம்பெனிக்கு வட்டம் போட்டார்கள்.

ஒரே பிரச்னை, இஸ்ரேல் அவர்களிடம் நேரடியாக மஞ்சள் கேக் வாங்க முடியாது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், `அணுகுண்டு ஆராய்ச்சிக்கு நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம்' என்று மறுத்துவிடுவார்கள்.
ஆகவே, இஸ்ரேலின் பெயரைச் சொல்லாமல், பெல்ஜியத்திலிருந்து மஞ்சள் கேக்கை லவுட்டவேண்டும். அதற்கு என்ன வழி? ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது மொஸாட்.

அப்போதுதான், அவர்களுக்கு அந்த யோசனை தோன்றியது. அணுகுண்டு ஆராய்ச்சி என்று சொன்னால்தானே எல்லோரும் அலறுகிறார்கள்? அதற்குப் பதிலாக வேறொரு பொய்க் காரணத்தைச் சொல்லி மஞ்சள் கேக்கை வாங்கிவிட்டால் என்ன?

செய்யலாம். ஆனால், இஸ்ரேல் மஞ்சள் கேக் வாங்குகிறது என்று தெரிந்தாலே, அமெரிக்காவுக்கு மூக்கு வியர்த்துவிடுமே. அவர்களை எப்படிச் சமாளிப்பது?

அதற்கும் மொஸாட் ஒரு வழி கண்டுபிடித்தது. ஒரு படத்தில் விவேக் சொல்வதுபோல், `ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்ல கை காட்டிட்டு, ஸ்ட்ரெய்ட்டாப் போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்!'

No comments:

Post a Comment