Tuesday, November 24, 2009

kps2009-11-05

color=#003399>color=#ff0000 size=6>எனக்கு ஒரு மிக்21 வேணும்' என்றார் மொர்டெசாய் ஹாட்.
மிக் 21 என்றால், ஏதோ கடையில் போய்க் காசு கொடுத்து வாங்கி வருகிற சமாசாரம் இல்லை. அதிநவீனப் போர் விமானம், ரஷ்யா வின் தயாரிப்பு.
அமெரிக்கா, ரஷ்யா இடையிலான பனிப்போர் சூடு பிடித்திருந்த நேரம் அது. ரஷ்யாக்காரர்கள் என்ன செய்தாலும் அமெரிக்கர்களுக்கு ஜன்னி கண்டது. எப்போதும் அவர்களுடைய தொழில்நுட்பத்தைவிட மேலே இருக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார்கள்.


ஆனால், மிக்21 விஷயத்தில் அமெரிக்காவின் பாச்சா பலிக்கவில்லை. ரஷ்யா மிகக் கவனமாக, தன்னுடைய தோழமை நாடுகள், முக்கியமாக அமெரிக்காவுடைய விரோதிகளுக்கு மட்டுமே இந்த விமானத்தை விற்பனை செய்தது. அதன்பிறகும், விமானத்தின் பாதுகாப்பு, பராமரிப்பு, ரிப்பேர் பார்ப்பது தொடங்கி அதற்கு பெட்ரோல் போடுவது, விமானிகளுக்குப் பயிற்சி தருவது வரை சகலத்தையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.

இதனால், அமெரிக்காவுக்கு டென்ஷன் அதிகரித்தது. மிக்21-ல் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளத் துடித்தார்கள். எப்படியாவது ஒரு மிக்21 விமானத்தைக் கடத்திவர வேண்டும், அதைப் பிரித்துக் குடலாப்ரேஷன் செய்யவேண்டும், அப்போதுதான் அதைச் சமாளிப்பதற்கு, எதிர்த்துத் தாக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முடியும். அதுவரை அமெரிக்காவுக்கு நிம்மதி கிடையாது.

ஆனால், அமெரிக்க உளவு நிறுவனங்களும் ராணுவமும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும், மிக்21 மட்டும் அவர்களுடைய கைக்குச் சிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப்போயிருந்தார்கள்.

இந்த நேரத்தில்தான், மிய்ர் அமித் மொஸாட் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இஸ்ரேலின் முக்கியமான ராணுவ அதிகாரிகள், அலுவலர்களையெல்லாம் சந்தித்துப் பேச ஆரம்பித்தார்.
அப்போது, இஸ்ரேல் விமானப் படையின் தலைவர் ஜெனரல் மொர்டெசாய் ஹாட். அவர்தான் மிய்ர் அமித்துக்கு மிக்21ஐ அறிமுகப்படுத்தினார், `நாம இந்த விமானத்தைப்பத்தி இன்னும் விளக்கமாத் தெரிஞ்சுக்கணும், அதுவும் உடனடியா!'

`ஏன் ஜெனரல்? இதனால நமக்கு என்ன பிரயோஜனம்?'

`நம்மைச் சுத்தியிருக்கிற எதிரி நாடுங்கல்லாம் மிக்21 வெச்சிருக்காங்க, அவங்க திடீர்னு நம்மமேல படையெடுத்தா, இந்த விமானங்களை எப்படிச் சமாளிக்கறது? நம்மகிட்டயும் ஒரு மிக்21 இருந்தா அதை ஆராய்ஞ்சு பார்த்துப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்' என்றார் மொர்டெசாய் ஹாட். `எப்படியாவது ஒரு மிக்21 விமானத்தை இஸ்ரேலுக்குக் கடத்திக்கிட்டுவரணும். உங்களால முடியுமா?'

கஷ்டம் தான். ஆனானப்பட்ட அமெரிக்காவே மிக்21 விஷயத்தில் செமையாக விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது, மொஸாட்டால் என்ன பெரிதாகச் செய்துவிடமுடியும்?

ஆனால் மிய்ர் அமித் தன்னுடைய குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை, `மிக்21தானே? கண்டிப்பா முயற்சி செய்யறேன்' என்றுமட்டும் சொல்லிவிட்டு வந்தார்.

ஆனால், மொஸாட் ஏன் வேலை மெனக்கெட்டு மிக்21ஐக் கடத்த வேண்டும்? இஸ்ரேலிடம் இல்லாத பணமா? ரஷ்யர்களுக்குக் காசு கொடுத்து ஒரு விமானம் வாங்கிப் போட்டால் என்ன?

ம்ஹூம், சான்ஸே இல்லை. இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாளிகள் என்பது உலகத்துக்கே தெரியும். மொஸாட் கோடிகோடியாகக் கொட்டினாலும் ரஷ்யாக்காரர்கள் மனம் இரங்கமாட்டார்கள்.
border=0 hspace=10 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-05/imagefolder/08a.jpg" width=109 height=148>
வேறு வழியே இல்லை. விமானத்தைக் கடத்தவேண்டியதுதான்!
உடனடியாக, அக்கம்பக்கத்தில் மிக்21 எங்கெல்லாம் இருக்கிறது என்று விசாரித்தார் மிய்ர் அமித்: எகிப்தில் 34, சிரியாவில் 18, ஈராக்கில் 10.

இந்த நாடுகளில் உள்ள பைலட்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தது மொஸாட். அவர்களுக்கு நிறையக் காசு கொடுத்து, நைசாக ஒரு மிக்21ஐ இஸ்ரேலுக்குள் ஓட்டி வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

ஆனால், ஒரே பிரச்னை, மிக்21 போன்ற அதிநவீன விமானங்களை எல்லா பைலட்களும் ஓட்டிவிட முடியாது. அந்தந்த நாட்டு ராணுவத்தின் மிகச் சிறந்த, அனுபவம் மிகுந்த, ரொம்ப நம்பிக்கையான விமானிகளுக்கு மட்டும்தான் அந்த கௌரவம் கிடைக்கும்.

இதுமாதிரி `சீனியர்' பைலட்களை விலைக்கு வாங்குவது அத்தனை சுலபமில்லை. `லஞ்சம் தருகிறேன், விமானத்தைக் கடத்து' என்று சொல்லிக் கொண்டு யாராவது வந்தால் உதைத்துத் தோலை உரித்துவிடுவார்கள்.

இதனால், மொஸாட்டின் ஆரம்பக் கடத்தல் முயற்சிகள் படுதோல்வி அடைந்தன. அப்போதும் மிய்ர் அமித் நம்பிக்கை இழக்கவில்லை. தொடர்ந்து வெவ்வேறு திசைகளில் தூண்டில் போட்டுவிட்டுக் காத்திருந்தார்.

திடீரென்று, யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர்களுக்கு ஒரு மீன் சிக்கியது. ஈராக்கைச் சேர்ந்த ஜோசஃப் என்ற யூதர் மொஸாட்டைத் தொடர்புகொண்டார், `உங்களுக்கு மிக்21 வேணுமா? நான் ஏற்பாடு செய்யறேன். விலை ஒரு மில்லியன் டாலர். ஓகேயா?'

இப்படிச் சந்தையில் கத்தரிக்காய் வியாபாரம்போல் ஜோசஃப் பேச ஆரம்பிக்க, மொஸாட் திகைத்துப்போனது. யார் இந்த ஜோசஃப்? மிக்21 விமானத்தைக் கடத்துகிற அளவுக்கு ஈராக் ராணுவத்தில் அவருக்குச் செல்வாக்கு உண்டா? இந்த ஆளை நம்பி மில்லியன் டாலரை எப்படித் தூக்கிக் கொடுப்பது?

இஸ்ரேல் அரசாங்க, ராணுவ வட்டாரங்களில் யாரும் ஜோசஃபை நம்பவில்லை. மொஸாட் அதிகாரிகளேகூட அவர் ஓர் ஏமாற்றுக்காரர் என்றுதான் நினைத்தார்கள், `இந்த வம்பே வேணாம், ஒதுங்கிடுங்க, அதுதான் உங்களுக்கு நல்லது' என்று மிய்ர் அமித்தை எச்சரித்தார்கள்.

ஆனால், அப்போதைய நிலைமையில் மிய்ர் அமித்துக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த வாய்ப்பையும் தவறவிட்டால், அதன்பிறகு மிக்21 தன் கைக்குக் கிடைக்காமலே போய்விடுமோ என்று அவருக்குக் கவலை. அதற்காகக் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துப் பார்த்துவிடலாம் என்று தீர்மானித்தார்.

உடனடியாக, மொஸாட் ஜோசஃபை அழைத்தது, `நாங்க பணம் கொடுக்க ரெடி. ஆனா, நீங்க யார்? எப்படி மிக்21ஐக் கடத்துவீங்க?'

ஜோசஃப் மளமளவென்று தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார். `விமானத்தைக் கடத்தப்போறது நான் இல்லை, என்னோட மருமகன்தான். அவன் பேரு முனிர் ரெட்ஃபா, ஈராக் விமானப் படையில பைலட்டா இருக்கான்.'

`அவரால ஒரு மிக்21ஐ இஸ்ரேலுக்குக் கொண்டுவரமுடியுமா?'
`நிச்சயமா முடியும்' அடித்துச் சொன்னார் ஜோசஃப், `முனிருக்கு இந்த ராணுவத்தில மரியாதையே இல்லை. அவனோட மனசுக்குப் பிடிக்காத விஷயத்தையெல்லாம் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தறாங்க. பையன் ரொம்ப நொந்துபோயிருக்கான். இந்த நிலைமையில நான் என்ன சொன்னாலும் கேப்பான். நீங்க கவலைப்படவேண்டாம்.'

`நாம முதல்ல அந்த முனிரைச் சந்திச்சுப் பேசணும்' என்றார் மிய்ர் அமித்.. `நிஜமாவே அவர் மிக்21ஐக் கடத்தறதுக்குத் தயாரா இருக்காரான்னு விசாரிக்கணும். அதுக்கப்புறம் மத்த விஷயங்களை முடிவு செஞ்சுக்கலாம்.'

விரைவில், முனிர் ரெட்ஃபா இஸ்ரேலுக்கு வந்தார். பல ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையினர் அவரைச் சந்தித்தார்கள். உண்மையிலேயே அவருக்கு ஈராக் ராணுவத்தின்மீது வெறுப்பு இருக்கிறதா, எத்தனை தடைகள் வந்தாலும் சமாளித்து விமானத்தைக் கடத்திக்கொண்டு வரும் அளவுக்குத் தைரியமான ஆள்தானா, அல்லது கடைசி நிமிடத்தில் பயந்துகொண்டு டிராயரை நனைத்துவிடுவாரா என்று தோண்டித் துருவினார்கள்.

கடைசியாக, இஸ்ரேலுக்குத் திருப்தி. முனிர் கேட்கிற தொகையைக் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். மிக்21 விமானத்தைக் கடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டது. நிமிட சுத்தமாகத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், முனிர் விமானத்தைக் கடத்தியவுடன் ஈராக் அரசாங்கம் விரல் சூப்பிக்கொண்டு உட்கார்ந்திருக்குமா? உள்ளூரில் இருக்கிற முனிருடைய பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்களையெல்லாம் பிடித்துச் சித்திரவதை செய்யமாட்டார்களா?

`நீங்க அதைப்பத்திக் கவலைப்படவேண்டாம்' என்றது மொஸாட், `யாருக்கும் தெரியாம உங்க குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் ஈராக்கிலிருந்து பத்திரமா வெளியே கொண்டுவர வேண்டியது எங்க பொறுப்பு.'

இன்னொரு பிரச்னை, ஈராக், இஸ்ரேல் எல்லைகளுக்கு நடுவே முனிர் பல நூறு கிலோ மீட்டர்களைக் கடக்க வேண்டும். அவ்வளவு தூரம் ஒரு திருட்டு விமானத்தை ஓட்டிவர முடியுமா? வழியில் யாராவது சந்தேகப்பட்டுச் சுட்டுத் தள்ளிவிட்டால்?

இதற்கும் இஸ்ரேல் ஒரு தந்திரம் செய்தது. ஈராக், அதன் நட்பு நாடுகள் யார் கண்ணிலும் படாமல் இஸ்ரேல் வருவதற்கு ஒரு சுற்றுவழி கண்டுபிடித்தார்கள். இந்தப் பாதையில்தான் முனிர் விமானத்தை ஓட்டிவர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

`மிஸ்டர் ரெட்ஃபா, இது ரொம்ப ரிஸ்க்கான வேலை. கொஞ்சம் அசந்தாலும் உங்க உயிருக்குத்தான் ஆபத்து' என்றார் ஜெனரல் மொர்டெசாய் ஹாட்.

`அதைப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க சார்' என்றார் முனிர் ரெட்ஃபா, `சீக்கிரமே மிக்21 உங்க கையில இருக்கும். அதுக்கு நான் பொறுப்பு!'
ஈராக் திரும்பிய முனிர், தன்னுடைய கடத்தல் திட்டத்தை நிறைவேற்றத் தயாரானார். இன்னொருபக்கம் மொஸாட் ஏஜென்டுகள் முனிரின் குடும்பத்தினரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஈராக்கிலிருந்து வெளியேற்றினார்கள், மிக்21ன் கடத்தல் பாதையில் எந்தப் பிரச்னையும் வராதபடி காய்களை நகர்த்த ஆரம்பித்தார்கள்.

அப்போதும், மிய்ர் அமித், மற்ற மொஸாட் உளவாளிகளுக்கு டென்ஷன் குறையவில்லை, இந்தத் திட்டம் ஒழுங்காக வேலை செய்யுமா? நிஜமாகவே நம்மால் மிக்21ஐக் கடத்திவிட முடியுமா? அமெரிக்காவால், சி.ஐ.ஏ.வால் முடியாததை நாம் சாதிக்கப் போகிறோமா? அல்லது பல் உடைந்து பின்வாங்கப் போகிறோமா?

color=#333399>(தொடரும்)

No comments:

Post a Comment