Tuesday, November 24, 2009

kps2009-10-29

color=#000099>color=#ff0000 size=6>இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து ஒன்பது மாதங்கள் கழித்து, 1948 மே 5-ம் தேதி யூதர்களுக்கான தனி தேசம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர், இஸ்ரேல்.

ஆனால், நம்மைப்போல் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவதற்கும் பாடுவதற்கும் இஸ்ரேலுக்கு நேரமில்லை. எல்லாத் திசை களில் இருந்தும் அவர்களை நெருக்கியடித்துத் துரத்துவதற்கு அதிரடிக்கார மச்சான்கள் காத்திருந்தார்கள்.

இஸ்ரேல் யோசித்தது. இதுவரை பாதுகாப்புக்கு இருந்த பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிவிட்டார்கள். இனிமேல் பாலஸ்தீனர்கள். அவர்களுடைய ஆதரவு நாடுகள் நம்மிடம் வாலாட்டாமல் தடுக்க வேண்டுமென்றால், நமது உளவுத்துறையைப் பலப்படுத்தவேண்டும். அக்கம்பக்கத்தில், தூரதேசங்களில் உள்ள நம்முடைய விரோதிகளோ, நண்பர்களோ கொஞ்சம் சத்தமாகத் தும்மினால்கூட அது நமக்குக் கேட்கவேண்டும். அதற்கு என்ன வழி?

1948 ஜூன் 7-ம் தேதி, இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்குரியன் தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் சிலரை அழைத்தார். `இன்றைய சூழ்நிலையில் இஸ்ரேலின் உளவு பலத்தை அதிகரிப்பது எப்படி?' என்று ஆலோசனை நடத்தினார்.

பிரதமரே இப்படிக் கேட்கிறபோது, அதிகாரிகள் சும்மா இருப்பார்களா? ஆளாளுக்கு யோசனைகளை வீசினார்கள். விவாதம் தூள் பறந்தது.`உளவுப்பணிகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்தணும்.'

`அதெல்லாம் வேணாம். நம்மோட எதிரிங்க எல்லாரும் ஊருக்குள்ளதான் ஒளிஞ்சிருக்காங்க, அவங்களைத் தோண்டி எடுத்து வெளியே கொண்டுவர்றதுக்கு போலீஸுக்குக் கூடுதல் அதிகாரம் தந்தாலே போதும்.'
`போலீஸெல்லாம் அடிதடிக்குத்தான் லாயக்கு. ரகசியமா வேலை பார்க்கணும்ன்னா அதுக்குன்னு தனி உளவு நிறுவனம் இருக்கணும்.'

`உள்ளூர்ல உளவு பார்த்து என்னய்யா பிரயோஜனம்? நம்ம எல்லையைச் சுத்திலும் விரோதிங்க முறைச்சுக்கிட்டிருக்காங்க. அவங்களை நோட்டம் விடறதுக்கு யாராவது வேணாமா?'

`உளவாளிங்களை வெளிநாட்டுக்கு அனுப்பறதுக்கு, அங்கிருக்கறவங்களை நம்ம வேலைக்குப் பயன்படுத்திக்கறதுக்கு ஒரு வழி செய்யணுமே, அது யாரோட பொறுப்பு? அதுக்குத் தேவையான பட்ஜெட்டை யார் ஒதுக்குவாங்க?'இப்படி ஒவ்வொருவரும் பேசப் பேச, பிரதமருக்குத் தலை சுற்றியது. அவருக்கு யாரை நம்புவது என்றே புரியவில்லை. இஸ்ரேலின் உளவுத்துறை எப்படி அமையவேண்டும் என்கிற ஆரம்பக் குழப்பம், இப்போது மேலும் சிக்கலாகிவிட்டது.கடைசியாக, பிரதமர் ஒரு முடிவுக்கு வந்தார். `இவங்க சொல்றது எல்லாமே சரியாத்தான் தோணுது. அதன்படி பார்த்தா, இஸ்ரேலுக்கு ஓர் உளவுத்துறை போதாது. நாலஞ்சு உளவு நிறுவனங்களைத் தொடங்கணும். எல்லோருக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்கணும்.'அன்று இரவு, டேவிட் பென்குரியன் தன்னுடைய டைரியில் எழுதினார், `இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மூன்று உளவு நிறுவனங்களைத் தொடங்கப்போகிறோம்.'
border=0 hspace=10 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-29/imagefolder/08a.jpg" width=220 height=179>
முதலில், ராணுவத்தின் உளவுப் பிரிவு. இதன் தலைவர்களாக ஐஸர் பீரி, விவியன் ஹைம் ஹெர்ட்ஸோக் இருவரும் பணியாற்றுவார்கள்.அடுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனி உளவு நிறுவனம். இதற்குப் பொறுப்பு ஐஸர் ஹரேல் மற்றும் யோஸெஃப் யிஸ்ரேலி.மூன்றாவதாக, வெளி அரசியல் விவகாரங்களைக் கவனிக்கும் ஓர் உளவுத்துறைப் பிரிவு. அதன் தலைவர் ரீவென் ஷிலோஹ்.

சும்மா பெயர்களை மட்டும் படிக்கிற நமக்கே இப்படித் தலை சுற்றுகிறது. அப்படியானால், நிஜமாகவே இந்த உளவுப் பிரிவுகளெல்லாம் தனித்தனியாக இயங்கத் தொடங்கியபோது, இஸ்ரேலில் என்னென்ன குழப்பங்கள் முளைத்திருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்!

ஒரு வேலை உருப்படியாக நடக்க வேண்டுமென்றால், அதற்கு யாரேனும் ஒருவர் மட்டும் பொறுப்பேற்க வேண்டும். அப்படியில்லாமல் ஒன்பது பேர் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்து கிண்டினால் உப்புமா காலி.அடுத்த பல மாதங்கள், இஸ்ரேலில் எந்த உளவு வேலையும் உருப்படியாக நடக்கவில்லை. யாராவது எதையாவது செய்ய முயன்றால் போச்சு, மற்ற உளவு நிறுவனங்களுக்கு மகாக் கோபம் வந்தது. `டீச்சர், இவன் என் பென்சிலைப் பிடுங்கறான் டீச்சர்' என்று குற்றம் சாட்டுகிற எல்.கே.ஜி. பிள்ளைகளைப்போல் உடனே பிரதமரிடம் ஓடினார்கள், `பாருங்க சார், இந்த ஆள் எங்க அதிகாரத்தில தலையிடறார்.'

`உங்க அதிகாரமா? அது என்னது?'
அங்கேதான் குழப்பமே. ஒன்றுக்கு மூன்று உளவு நிறுவனங்களைத் தொடங்கிவைத்த பிரதமர், யாருக்கு என்ன அதிகாரம் என்பதைத் தெளிவாக வரையறுக்கவில்லை. அவர் குத்துமதிப்பாகச் சொன்ன எல்லைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் புரிந்துகொண்டார்கள். இதனால், யார் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதில் ஏகப்பட்ட சண்டை.

அதற்குமேலாக, பட்ஜெட் களேபரம். ஒவ்வோர் உளவு நிறுவனமும் தன்னை அதிமுக்கியமாக நினைத்துக்கொண்டு எக்ஸ்ட்ரா நிதி ஒதுக்கச் சொல்லிக் கேட்டது. `அவ்ளோ காசுக்கு நான் எங்கே போறது?' என்று பிரதமர் கையை விரித்ததும், ஆளாளுக்குக் கோபித்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்துவிட்டார்கள். `இது என்ன தேங்காய் மூடிக் கச்சேரியா? பட்ஜெட் இல்லாம நாங்க எப்படி வேலை பார்க்கறது?'

இவ்வளவு பேசுகிறார்களே, ஏதாவது செயலில் காட்டுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு முக்கியமான வேலை என்று வரும்போதுதான், `அது என்னோட பொறுப்பு இல்லை. அவனைக் கேளுங்க' என்று மாற்றி மாற்றிக் கை காட்டிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அல்லது, `அந்த ரிப்போர்ட்டா? ஏற்கெனவே என்னோட டிபார்ட்மென்டுக்கு அனுப்பிட்டேனே, உங்களுக்குக் கிடைக்கலியா?' என்று வெறுப்பேற்றினார்கள். கடைசியில் பிரதமருக்கு டென்ஷன் ஏறியதுதான் மிச்சம்.

1949 ஜூலையில், ரீவென் ஷிலோஹ் பிரதமரைச் சந்தித்தார். `நம்மோட உளவு நிறுவனங்கள் ஒவ்வொண்ணும் கண்டபடி தறிகெட்டு ஓடிக்கிட்டிருக்கு. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி மூக்கணாங்கயிறு மாட்டணும்' என்றார்.border=0 hspace=10 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-29/imagefolder/08b.jpg" width=200 height=134>


பிரதமரும் கொஞ்ச காலமாக அதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தார். `நீயா, நானா' போட்டியிலேயே உளவுத்துறையின் நேரமெல்லாம் வீணாகிக்கொண்டிருந்தால் இஸ்ரேலுக்குத்தான் ஆபத்து. உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.`நீங்க என்ன நினைக்கறீங்க ரீவென்? இந்தப் பிரச்னையைத் தீர்க்கறதுக்கு உங்க யோசனை என்ன?'`வெவ்வேற வேலைகளைச் செய்யறதுக்குத் தனித்தனி உளவுத்துறை நிறுவனங்களை அமைக்கறது தப்பில்லை. ஆனா, உங்க நேரடிக் கட்டுப்பாட்டில் ஒரு விசேஷ டிபார்ட்மென்ட் இருக்கணும். அவங்களுக்குத் தேவையான பட்ஜெட், கூடுதல் அதிகாரமெல்லாம் கொடுத்து, அவங்களே மத்த உளவு நிறுவனங்களையெல்லாம் கட்டி மேய்க்கிறதுக்கு வழி செய்யணும். எல்லோரும் சேர்ந்து ஒத்துழைச்சா மட்டும்தான் இது நடக்கும்.'

`அது புரியுது. ஆனா, இவங்கதான் ஆளுக்கு ஒரு திசையில ஓடறாங்களே, எல்லோரையும் எப்படி ஒண்ணா வேலை செய்ய வைக்கிறது?'

`வேற வழியில்லை மிஸ்டர் பிரதமரே, நீங்க அதிகாரத்தைக் கையில எடுக்கணும். சாட்டை இல்லாம மாடு பணியாது, வண்டி ஓடாது.'

பிரதமர் சம்மதித்தார். ரீவென் ஷிலோஹ் ஆலோசனைப்படி, இஸ்ரேலின் பல்வேறு உளவு நிறுவனங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கான ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.ஆனால், இந்த ஒருங்கிணைப்பு கமிட்டியும் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. காரணம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவு. அதிகாரங்களும் போதுமான அளவு இல்லை.பிரதமருக்கு எரிச்சல், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஒத்தையா, ரெட்டையா விளையாடிக்கொண்டிருப்பது?குறைந்தபட்சம் வெளிநாட்டு சமாசாரங்களைக் கவனிப்பதற்காவது இஸ்ரேலில் ஒரு நல்ல, வலுவான, திறமையான உளவுத்துறை வேண்டாமா?

1951 மார்ச் 2-ம் தேதி, இஸ்ரேலில் உள்ள அனைத்து உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அவசர அழைப்பு வந்தது. `பிரதமர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.'அந்த திடீர்க் கூட்டத்தில்தான், இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்குரியன் `ஹ மொஸாட் லி டியும்' என்கிற புதிய உளவுத்துறையைப்பற்றி அறிவித்தார். சுருக்கமாக `மொஸாட்' என்று அழைக்கப்பட்ட இந்த உளவு நிறுவனத்தின் முதல் தலைவராக ரீவென் ஷிலோஹ் நியமிக்கப்பட்டார்.

ஏற்கெனவே இஸ்ரேலில் இருக்கிற குழப்பங்கள் போதாதா? இன்னொரு உளவுத்துறை எதற்கு?மற்ற உளவு நிறுவனங்களுக் கும் மொஸாட்டுக்கும் முக்கியமான வித்தியாசம், இது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும். இஸ்ரேல் எல்லைக்கு வெளியே எந்த உளவு வேலை என்றாலும், அதற்கு இவர்கள்தான் பொறுப்பு. ராணுவம், காவல்துறை, உள்துறை அமைச்சகம், வெளியுறவு கமிட்டி என்று யாரும் அவர்களுடைய அதிகாரத்தில் குறுக்கிட முடியாது. அவர்கள் ஒரு வேலையைச் செய்யத் தீர்மானித்துவிட்டால், பிரதமரைத் தவிர வேறு யாரும் மொஸாட்டைக் கேள்வி கேட்க முடியாது.

`மொஸாட்டுக்காக, இந்த வருடம் இருபதாயிரம் இஸ்ரேலிய பவுண்ட்கள் பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறேன்' என்றார் பிரதமர். `இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு மொஸாட் புதிய உளவாளிகளை வேலைக்குச் சேர்க்கலாம். மற்ற உளவு நிறுவனங்களில் இருக்கிற திறமைசாலிகளை இழுக்கலாம். நவீன கருவிகள் வாங்கலாம். உலகளாவிய ஒற்றர் நெட்வொர்க் அமைக்கலாம். எப்படியாவது நம்முடைய உளவுத்துறை பலப்படவேண்டும். நமது எதிரிகளைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் முன்கூட்டியே கிடைக்க வேண்டும், அதுதான் முக்கியம்.'

சுருக்கமாகச் சொன்னால், வானளாவிய அதிகாரம், நினைத்ததைச் செய்யும் சுதந்திரம், கை நிறையப் பணம். மற்ற உளவுப் பிரிவுகளின் தலைவர்கள் மொஸாட்டைப் பொறாமையுடன் பார்க்க ஆரம்பித்தார்கள்!

No comments:

Post a Comment