Tuesday, November 24, 2009

kps2009-11-01

color=#ff6600 size=6>color=#003399>திகாரம் எங்கே குவிந்தாலும், பக்கத்திலேயே கவிழ்ப்பு வேலைகள் ஆரம்பமாகிவிடும். அது உளவுத்துறையாக இருந்தாலும் சரி, உள்ளாட்சித் துறையானாலும் சரி.

இஸ்ரேலில் 'மொஸாட்' என்கிற நிறுவனத்துக்குப் பெயர் வைத்து போர்டு மாட்டிய தேதியிலேயே அதன் காலை வாருகிற பேஜார் வேலைகள் தொடங்கிவிட்டன. மற்ற அரசாங்கத் துறைகள், உளவுப் பிரிவுகளில் இருந்த அதிகாரிகளெல்லாம், எப்போது மொஸாட்டைக் கவிழ்க்கலாம், அதிகாரத்தைத் தங்கள் கைக்குள் கொண்டுவரலாம் என்று துடித்துக்கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு வசதியாக, ஆரம்ப கால மொஸாட் ஏஜெண்டுகள் சிலர் கத்துக்குட்டித்தனமான உளவு வேலைகளில் இறங்கி மாட்டிக்கொண்டார்கள். இதைப்பற்றிக் கேள்விப்பட்ட அந்த நாட்டு அரசாங்கங்கள், இஸ்ரேலுக்கு ஐ.எஸ்.டி. கால் போட்டுக் கண்டித்தார்கள், `இந்த உளவு பார்க்கற வேலையெல்லாம் வேண்டாம். ஒழுங்கா வாலைச் சுருட்டிவெச்சுக்கிட்டு சமர்த்தா இருங்க. இல்லாட்டி ஒட்ட நறுக்கிடுவோம்!'
ரகசியமாக இயங்க வேண்டிய ஓர் அமைப்பு, இப்படி ஊருக்கு ஊர் உதை வாங்கி மானம் போனால் என்ன ஆவது? இந்தச் சொதப்பலுக்கெல்லாம் யார் காரணம்?

வேறு யார்? மொஸாட் தலைவர் ரீவென் ஷிலோஹ்தான். அவர் மட்டும் கொஞ்சம் ஒழுங்காக, கட்டுக்கோப்பாக மொஸாட்டை உருவாக்கி, வழி நடத்தியிருந்தால், இப்படி நம்முடைய ஏஜெண்டுகள் வெளிநாட்டில் போய் மாட்டிக்கொள்வார்களா?

இஸ்ரேல் அரசாங்க வட்டாரங்களில் ரீவென் ஷிலோஹுக்கு எதிரான கோஷங்கள் அதிகரித்தன, `அவருக்கு வயசாயிடுச்சு, பேசாம சீட்டைக் கிழிச்சு அனுப்பிட்டு, வேற உருப்படியான தலைவரைக் கண்டுபிடிங்க. இல்லாட்டி மொஸாட்டுக்கு எதிர்காலமே கிடையாது.'

பிரதமர் யோசித்தார். ரீவென் ஷிலோஹ் திறமைசாலிதான். ஆனால், border=0 hspace=5 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-01/imagefolder/08a.jpg" width=115 height=137>அவருடைய தலைமையின் கீழ் மொஸாட்டில் எந்தப் பெரிய முன்னேற்றத்தையும் காணோம், இஸ்ரேலின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் இவரை நம்பிப் பணயம் வைக்கமுடியுமா? ரொம்ப ரிஸ்க்!

நிலைமையைப் புரிந்துகொண்ட ரீவென் ஷிலோஹ், தன் பதவியை ராஜினாமா செய்தார். மொஸாட்டின் புதிய தலைவராக ஐஸர் ஹரேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொஸாட்டில் ஐஸர் ஹரேல் செய்த முதல் வேலை, எல்லா ஏஜெண்டுகள், அதிகாரிகளையும் கூப்பிட்டு ட்ரில் வாங்கியதுதான். `நீங்க ஒவ்வொருத்தரும் கில்லாடிங்கதான், சந்தேகமே இல்லை. ஆனா நம்மோட ஒட்டுமொத்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, மொஸாட் இதுவரைக்கும் பெரிசா எதையும் சாதிச்சுடலை, அப்புறம் இத்தனை திறமைசாலிங்க ஒண்ணாச் சேர்ந்து என்ன பிரயோஜனம்? நாம உடனடியா இதைப்பத்தி யோசிக்கணும், பிரச்னையைச் சரி செய்யணும். இனிமேலும் சும்மா உட்கார்ந்திருந்தா நம்ம எல்லோருக்குமே ஆபத்து!'

ஐஸர் ஹரேல் சும்மா மிரட்டுவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை, நிஜமாகவே ஒவ்வோர் ஏஜெண்டுக்கும் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்தார். அவர்களுடைய திறமையில் தென்படுகிற இடைவெளிகளைச் சரி செய்வதற்கான முயற்சிகளை எடுத்தார். அதற்குத் தேவையான பயிற்சிகள், வழிகாட்டல், உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார். இத்தனைக்குப்பிறகும் ஒழுங்காகச் செயல்படாத நோஞ்சான்களை வீட்டுக்கு அனுப்பவும் தயங்கவில்லை.

அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அன்றைய மொஸாட் உளவாளிகளுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது, `இனிமே இங்கே அரைகுறை வேலையே கூடாது, எதையும் முழுசா, சிறப்பாச் செய்யணும். இல்லாட்டி மூட்டையைக் கட்டிகிட்டுக் கிளம்பவேண்டியதுதான்.'

border=0 hspace=5 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-01/imagefolder/08b.jpg" width=103 height=159>பழைய ஏஜெண்டுகளுக்குச் சுறுசுறுப்பு ஊசி போட்டபிறகு, புதிய மொஸாட் உளவாளிகளைக் கண்டுபிடிக்கும் வேலை. இந்த விஷயத்தில் ஐஸர் ஹரேல் யாரையும் நம்பவில்லை, அவரே பல நாடுகளுக்குப் பயணம் செய்து, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் இன்டர்வ்யூ செய்தார், கொஞ்சம் சுமாரான, சந்தேகத்துக்கு இடமான நபர்களைத் தயவுதாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்துவிட்டார்.

இனிமேல், மொஸாட்டில் ஒன்றரையணா ஆட்களுக்கு இடம் இல்லை. எல்லோரும் மகா கில்லாடிகளாக இருக்க வேண்டும். அதற்கு அரை இஞ்ச் குறைந்தாலும்கூட, வெளியே தள்ளிக் கதவைச் சாத்து!

அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள், ஐஸர் ஹரேலின் கடின உழைப்புக்குப் பலன் தெரிய ஆரம்பித்தது. அநேகமாக எல்லா முக்கிய நாடுகளிலும் மொஸாட்டுக்குத் திறமையான உளவாளிகள் இருந்தார்கள். அவர்கள் திரட்டிய தகவல்கள் இஸ்ரேலுக்கு உடனுக்குடன் வந்து சேர்ந்தன. ஆனால், பின்னணியில் இப்படி ஒரு ரகசிய நெட்வொர்க் இயங்கிக்கொண்டிருப்பது யாருக்கும் தெரியவில்லை.

தகவல் திரட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், இஸ்ரேலின் நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வெளி முயற்சிகளை, முக்கியமாக பாலஸ்தீனர்களின் தாக்குதல் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து, தடுத்து நிறுத்தியது மொஸாட். உலகெங்கும் யூதர்களுக்கு எதிராகச் செயல்படுகிறவர்களைத் தட்டிவைத்தார்கள். அல்லது ரகசியமாகப் பொட்டலம் கட்டி இஸ்ரேலுக்கு அனுப்பிச் சிறையில் தள்ளினார்கள்.

ஓர் உளவுத்துறையை வலுவாக்குவதும், அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்துவதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். இங்கே மாநிலம் முழுக்கக் கிளைக் கழகங்கள் தொடங்குவதைப்போல, அங்கே வெவ்வேறு நாடுகளில் உளவு நெட்வொர்க் அமைக்க வேண்டும்,border=0 hspace=5 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-01/imagefolder/08c.jpg" width=92 height=158> இரண்டிலும் அடிமட்டத் தொண்டர்கள் நிற்காமல் வேலை செய்தால்தான் வளர்ச்சி, முன்னேற்றம், எல்லாமே.

ஆனால், இத்தனைக்குப் பிறகும், ஒரு கட்சி சட்டென்று ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. அதற்கு நல்ல, வலுவான கூட்டணி தேவை.

ஐஸர் ஹரேல் யோசித்தார், `நாம் யாருடன் கூட்டணி அமைத்தால் மொஸாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது?'

1954 மார்ச் மாதம், ஐஸர் ஹரேல் வாஷிங்டனுக்குச் சென்றார். அங்கே அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் தலைவர் ஆலென் டுலெஸைச் சந்தித்தார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்திப்பின்போது, ஆலென் டுலெஸுக்கு ஒரு கத்தியைப் பரிசாகக் கொடுத்தார் ஐஸர் ஹரேல். கை வேலைப்பாடுகள் நிறைந்த அந்தக் கலைப்பொருளில், ஓர் ஆழமான வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது:

`இஸ்ரேலின் பாதுகாவலர்கள், எப்போதும் தூங்குவதில்லை'.

அந்த வாக்கியத்தைப் படித்த ஆலென் டுலெஸ், லேசாகச் சிரித்தார். ஐஸர் ஹரேலின் கைகளைக் குலுக்கினார். `உங்களோட நானும் தூங்காம விழிச்சுகிட்டிருப்பேன்' என்றார்.

அதன்பிறகு, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வும் மொஸாட்டும் ஜிகிரி தோஸ்துகளாகிவிட்டார்கள். மொஸாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான திருப்புமுனை இது.

கார ணம், மொஸாட் குடிசைத்தொழில் என்றால், சி.ஐ.ஏ. பிரமாதமான பளபளா கட்டடத்தில் இயங்கும் கார்ப்பரேட் ஆஃபீஸைப்போல. அன்றைக்கு சி.ஐ.ஏ. கையில் இருந்த ஆள் பலம், உளவுச் சாதனங்கள், தொழில்நுட்பம் எல்லாமே பிரமாண்டமானவை. மொஸாட் அந்த உயரத்தை எட்டிப் பிடிக்கப் பல வருடங்கள் ஆகும்.

அதனால்தான், சி.ஐ.ஏ.வுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படத் தீர்மானித்தார் ஐஸர் ஹரேல். இதன்மூலம் அமெரிக்கா என்கிற பெரிய ராட்சசனின் துணையும் கிடைக்கிறது. அவர்களுடைய வழிகாட்டுதல், தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகளின்மூலம் மொஸாட்டை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றுவிடலாம்.

ஐஸர் ஹரேல் நினைத்ததுபோலவே, சி.ஐ.ஏ. மொஸாட்டுக்கு ஏகப்பட்ட பொன்முடிப்புகளை அள்ளி வழங்கியது.border=0 hspace=5 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-01/imagefolder/08d.jpg" width=99 height=146> அதுவரை அமெரிக்க உளவாளிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்த ரகசியக் கருவிகள் மொஸாட் ஏஜெண்டுகளுக்கும் கிடைக்க ஆரம்பித்தன. அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் தொடங்கி, எதிராளிக்குத் தெரியாமல் மாயத்திரைக்குப் பின்னே இயங்குவதற்கான நுட்பங்கள்வரை அவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தது சி.ஐ.ஏ.

இதுதவிர, மொஸாட் மற்றும் சி.ஐ.ஏ. உளவுத்துறைத் தலைவர்கள், அதிகாரிகள் பல விஷயங்களில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். இவர்கள் திரட்டிய தகவல்களை அவர்கள் பயன்படுத்துவது, அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் இவர்களுடைய உளவாளிகள் களத்தில் இறங்கி வேலை செய்வது என்று செம ஸ்ட்ராங்கான பந்தம்.

சி.ஐ.ஏ. உதவியுடன் மொஸாட்டின் பலம் அதிகரிக்க, அங்கே இஸ்ரேலில் சில அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு வயிறெரிந்தது. பிரதமர் பென்குரியனிடம் ஐஸர் ஹரேலைப் பற்றி விதவிதமாக வத்திவைக்க ஆரம்பித்தார்கள், `இந்த ஆள் சரியில்லை, திரைமறைவில் என்னென்னவோ செய்யறார். நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க'.

மொஸாட் இஸ்ரேல் பிரதமரின் செல்லப் பிள்ளைதான். ஆனாலும், அதன் தலைவர் இப்படிப் பெரிய சக்தியாக வளர்வதைப் பிரதமர் விரும்பவில்லை. ஐஸர் ஹரேலுக்குப் பலவிதமான நெருக்கடிகள் தொடங்கின.

1963-ம் ஆண்டுத் தொடக்கத்தில், ஐஸர் ஹரேல் மொஸாட் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாகப் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் மிய்ர் அமித்!

ஐஸர் ஹரேல், பத்து வருடங்களுக்குமேல் மொஸாட்டின் தலைவராக இயங்கியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில்தான், இன்றைக்கும் மொஸாட் மிக வலுவாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

அவருக்குப் பதில் மொஸாட் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மிய்ர் அமித்தும் நல்ல அனுபவம் கொண்டவர்தான். ஆனால், அவரால் `சூப்பர் மேன்' ஐஸர் ஹரேலைப்போலச் சிறப்பாகப் பணியாற்ற முடியுமா என்கிற சந்தேகம் பலருக்கு இருந்தது. முக்கியமாக, ஐஸர் ஹரேலுக்குக் கீழே வேலை செய்தவர்கள் பலர் இவரை மதிக்கவும் இல்லை. அவரோடு ஒத்துழைக்கவும் இல்லை. வேண்டுமென்றே முறைத்துக்கொண்டு மூலையில் போய் நின்றார்கள்.

இவர்களுக்கெல்லாம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக, மிய்ர் அமித் ஓர் ஆபத்தான வேலையில் இறங்கினார். மொஸாட்டின் 'அண்ணாத்தே'க்களான சி.ஐ.ஏ.வையே ஆச்சரியத்தில் வாய் பிளக்கவைத்த அதிரடி அது!

(தொடரும்)

No comments:

Post a Comment