Tuesday, November 24, 2009

kps2009-10-25

color=#006600 size=6>வெcolor=#0066cc>ளிநாட்டில் கஷ்டப்படுகிற யூதர்களைப் பாலஸ்தீனத்துக்கு அழைத்து வரவேண்டும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் என்கிற `பழைய' மொஸாடின் நோக்கங்கள் உசத்தியானவைதான். ஆனால் எதார்த்தம்?

ஹிட்லர் என்ன இளிச்சவாயரா? இவர்கள் பாட்டுக்கு அவருடைய ராஜ்ஜியத்துக்குப் போய் யூதர்கள் கையைப் பிடித்து வெளியே அழைத்துவந்துவிட முடியுமா? உள்ளே இருக்கிற யூதர்களுக்கே நித்ய பூஜை போட்டுக்கொண்டிருக்கிறவர், வெளியிலிருந்து வருகிற விருந்தாளிகளை விட்டுவைப்பாரா?

சிரமம்தான். ஆனால், ஹிட்லர் ஆட்சியில் எல்லோருக்கும் இதயம் தொலைந்துவிடவில்லை. அங்குள்ள சிலர் மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு, யூதர்களுக்குப் பல உதவிகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

ஷிண்ட்லர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹாலிவுட் வசூல்ராஜா ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் சினிமாவாக எடுத்துப் பிரபலப்படுத்திய அதே ஆஸ்கர் ஷிண்ட்லர்தான்.

ஆஸ்கர் ஷிண்ட்லர், ஜெர்மனியைச் சேர்ந்த தொழிலதிபர். ஆனால் அவருக்கு ஹிட்லரின் முரட்டுக் கொள்கைகளில் சம்மதம் இல்லை. யூதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று அவர் நினைக்கவில்லை.

அப்போது ஷிண்ட்லரின் தொழிற்சாலையில் ஏகப்பட்ட யூதர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஷிண்ட்லர் நினைத்திருந்தால், அவர்களை மொத்தமாக டிஸ்மிஸ் செய்து விரட்டிவிட்டிருக்கலாம். நாஜிப்படைகளிடம் பிடித்துக் கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஹிட்லர் கையால் அவருக்கு `ஜெர்மன் ரத்னா' விருதுகூடக் கொடுத்துக் border=0 hspace=5 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-25/imagefolder/8a.jpg" width=124 height=213>கொண்டாடியிருப்பார்கள்.

ஆனால், ஷிண்ட்லர் தன்னிடம் வேலை செய்கிற யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர்களை ஹிட்லரின் பிடியிலிருந்து காப்பாற்றினார். பல நூறு யூதர்கள் அவரால் உயிர் பிழைத்தார்கள்.

ஷிண்ட்லரைப் போலவே, ஹிட்லர் காலத்து ஜெர்மனியில் யூதர்களைக் காப்பாற்றுவதற்கு உதவிய இன்னொரு ஹீரோ, ஃப்ரான்ஸிஸ் எட்வர்ட் ஃபோலி. இவர், இங்கிலாந்து உளவு நிறுவனமான `விமி6'ன் ஏஜெண்ட்.

பொதுவாக, உளவாளிகளை வெளிநாட்டுக்கு அனுப்புகிறபோது, பாதுகாப்புக்காக மாறுவேஷம் போட்டுத்தான் அனுப்புவார்கள்.

மாறுவேஷம் என்றால், ஒட்டுத் தாடி, கன்னத்தில் மச்சம், தலையில் தொப்பி வைப்பது இல்லை. அந்த உளவாளியின் பெயர், ஊர், வேலை சகலத்தையும் மறைத்துப் புதிய அடையாளத்தை உருவாக்குவது. அவர் எதற்காக வெளிநாடு போகிறார் என்கிற உண்மையான நோக்கத்தை மறைப்பது. உளவுத்துறை பாஷையில் இதனை `கவர் செய்வது' என்று அழைப்பார்கள்.

இதையும் நம் சினிமாவில் நிறையப் பார்த்திருக்கிறோம். ஹீரோ வாத்தியாராகவோ, போஸ்ட்மேனாகவோ, பிக்பாக்கெட்காரராகவோ வருவார். வில்லன்களோடு பழகி விஷயங்களைத் தெரிந்துகொள்வார். கடைசியில் `ஹாஹாஹா, நான் யார் தெரியுமா?' என்றபடி உண்மையைச் சொல்வார், எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.

வெளிநாடு போகிற உளவாளிகளும் இப்படித்தான். பத்திரிகையாளர்களாக, அதிகாரிகளாக, சுற்றுலாப் பயணிகளாக, சமூக சேவகர்களாக, இன்னும் ஏகப்பட்ட முகமூடிகளின்மூலம் தங்களுடைய உண்மை நோக்கத்தைக் `கவர்' செய்துவிடுவார்கள்.

இங்கிலாந்துக்காரரான ஃப்ரான்சிஸ் ஃபோலி ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டபோது, அவருக்குப் போடப்பட்ட மாறுவேஷம், பாஸ்போர்ட் அதிகாரி.

அதாவது, ஃப்ரான்சிஸ் ஃபோலி சும்மாக்காச்சிக்கு தினமும் பாஸ்போர்ட் அலுவலகம் போகவேண்டும். அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட வேண்டும், தன் மேஜையில் இருக்கிற பேப்பர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும், யாரும் கவனிக்காதபோது, `ஒரு தம் அடிச்சுட்டு வந்துடறேன்' என்பதுபோல் ஏதாவது காரணத்தைச் சொல்லிவிட்டு வெளியே வந்து உளவு வேலைகளைக் கவனிக்க வேண்டும், அப்புறம் 'ஒண்ணும் தெரியாத பாப்பா'போல அலுவலகத்துக்குத் திரும்பி வந்து டீ குடிக்கலாம். அரட்டை அடிக்கலாம். சாயந்திரமானதும் சமர்த்தாக வீட்டுக்குத் திரும்பி வந்து, அதுவரை திரட்டிய எல்லாத் தகவல்களையும் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கலாம்.

சுலபமான வேலைதான். வேஷம் கலையாதவரை பிரச்னையில்லை. நடுவில் மாட்டிக்கொண்டால்தான் வம்பு, தீர்த்துக்கட்டிவிடுவார்கள்!

ஃப்ரான்சிஸ் ஃபோலி தனக்குக் கொடுக்கப்பட்ட உளவுத்துறை வேலைகளை ஒழுங்காகக் கவனித்தார். அதேசமயம், தன்னுடைய பாஸ்போர்ட் அதிகாரி வேஷத்தையும் வீணடிக்காமல் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அப்போது ஜெர்மனி முழுவதும் யூதர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஹிட்லரின் பிடி இன்னும் இறுகுவதற்குமுன்னால் எப்படியாவது தப்பித்துப்போய்விட வேண்டும் என்று யூத மக்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். மொஸாடும் அவர்களைப் பாலஸ்தீனத்துக்குக் கொண்டு செல்வதற்கான ஆள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தது.

ஆனால், மொஸாட் நினைத்ததுபோல் இந்த வேலை அத்தனை சுலபமாக இல்லை. border=0 hspace=5 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-25/imagefolder/8b.jpg" width=127 height=203>பணப் பிரச்னையில் ஆரம்பித்து ஏகப்பட்ட தடைகள், தலைவலிகள்.

ஜெர்மனி எல்லையில் மொஸாட் ஒரு பஸ்ஸையோ கப்பலையோ நிறுத்திவைத்து, `பாலஸ்தீனம் போறவங்கல்லாம் ஏறிக்கோங்க' என்று கூவமுடியாது. யூதர்கள் ஜெர்மனியிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் துரத்தப்படுகிறவர்கள் பாஸ்போர்ட், விசாவுக்கெல்லாம் எங்கே போவார்கள்? இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் குழம்பியது மொஸாட்.

இந்த நேரத்தில்தான், ஃப்ரான்சிஸ் ஃபோலி மொஸாடைப்பற்றிக் கேள்விப்பட்டார். யூதர்களைப் பாலஸ்தீனத்துக்குக் கடத்திச் செல்வது, அதன்மூலம் அவர்களை உயிர் பிழைக்கவைப்பது என்கிற திட்டம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் ஒரே பிரச்னை, இப்படி யூதர்களைப் பாலஸ்தீனத்துக்குக் கடத்திவருவது சட்டவிரோதம். அப்போது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த இங்கிலாந்து அரசாங்கம் இதற்குக் கடுமையான தடை விதித்திருந்தது.

ஃப்ரான்சிஸ் ஃபோலி ஓர் இங்கிலாந்துப் பிரஜை. அந்த நாட்டு உளவுத்துறைக்காக வேலை செய்கிற அரசாங்க அதிகாரி.

அப்படியானால், மொஸாடின் ஆள் கடத்தல் வேலைகளைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன், அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

உடனடியாகத் தன்னுடைய மேலதிகாரிகளை அழைத்து, `இப்படி ஒரு க்ரூப் யூதர்களைப் பாலஸ்தீனத்துக்குக் கடத்தப் பார்க்கறாங்க' என்று தனக்குத் தெரிந்த எல்லாத் தகவல்களையும் சொல்லியிருக்க வேண்டும். அந்தக் குழுவை ஒடுக்குவதற்கான வழிகளையும் சிபாரிசு செய்திருக்கவேண்டும், அதுதான் ஓர் உளவாளியின் கடமை.

ஆனால், ஃப்ரான்சிஸ் ஃபோலி அப்படிச் செய்யவில்லை. மொஸாட் செய்வது சட்டப்படி தவறாக இருந்தாலும், கொஞ்சம் மனிதாபிமானத்தோடு யோசித்தபோது, அதில் இருக்கும் நியாயம் அவருக்குப் புரிந்தது. மொஸாடைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார்.

அதே நேரம், அவருக்கு மொஸாட், யூதர்கள்மீது தனி ஆர்வம் பிறந்தது. ஜெர்மனியில் இருக்கும் யூத இனத்தவரைப்பற்றிய விவரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். ஹிட்லரின் அரசாங்கம் அவர்களுக்குச் செய்துகொண்டிருக்கிற கொடுமைகளைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, அவருக்கு உடல் நடுங்கியது.

ஜெர்மனியில் இருக்கும் யூதர்கள் அனைவரும் மரண பயத்தில் இருக்கிறார்கள். இப்போது வெறியாட்ட ட்ரெய்லர் ஓட்டிக்கொண்டிருக்கும் ஹிட்லர் மெயின் பிக்சருக்கு வருவதற்குள், இவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதுதான் நியாயம், தர்மம், எல்லாமே.

உடனடியாக, இந்த விஷயத்தில் மொஸாடுக்கு உதவுவது என்று தீர்மானித்துவிட்டார் ஃப்ரான்சிஸ் ஃபோலி. இதற்கு வசதியாக, அவருடைய பாஸ்போர்ட் அதிகாரி வேலை பயன்பட்டது.

அப்போது ஃப்ரான்சிஸ் ஃபோலி பெர்லின் நகரத்தில் இருக்கிற பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கே இங்கிலாந்து, பாலஸ்தீனம் செல்வதற்கான விசா கேட்டு ஏகப்பட்ட விண்ணப்பங்கள் வரும்.

பொதுவாக, ஒருவருக்கு விசா கொடுப்பது என்றால் நிறைய விஷயங்களைக் கவனித்து உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். நடுவில் ஏதாவது ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும்கூட, தயவு தாட்சண்யம் பார்க்காமல் அந்த விசா விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவார்கள்.

ஆனால், பாஸ்போர்ட் அதிகாரி போர்வையில் மறைந்திருந்த ஃப்ரான்சிஸ் ஃபோலி, தன்னிடம் வருகிற யூதர்களின் விண்ணப்பங்களைமட்டும் பிரித்து எடுத்தார். அவர்கள் யார், எவர் என்பதைப்பற்றிக் கவலையே படவில்லை. விதிமுறைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு எல்லோருக்கும் விசா கொடுத்தார். பாவம், அவர்கள் எப்படியாவது வெளியே போய்ப் பிழைத்துக் border=0 hspace=5 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-25/imagefolder/8c.jpg" width=172 height=286>கொள்ளட்டும்!

இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போது ஜெர்மனியிலிருந்து தப்பிச் செல்ல விரும்பிய பல யூதர்களுக்கு, பாஸ்போர்ட்டே இல்லை. அவர்களுக்கெல்லாம்கூட போலி ஆவணங்களை உருவாக்கி, திருட்டு பாஸ்போர்ட், விசா வாங்கிக்கொடுத்து அனுப்பியிருக்கிறார் ஃப்ரான்சிஸ் ஃபோலி.

இப்படி ஃப்ரான்சிஸ் ஃபோலியால் காப்பாற்றப்பட்ட யூதர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியவில்லை. நூறு, இருநூறு என்று தொடங்கி, எட்டாயிரம், பத்தாயிரம்வரை கணக்குச் சொல்கிறார்கள்.

ஆச்சரியமான விஷயம், இந்த யூதர்களையெல்லாம் ஃப்ரான்சிஸ் ஃபோலி நேரில் பார்த்தது கிடையாது. அவர்களுக்கும் இந்த இங்கிலாந்து உளவாளிதான் தங்களைக் காப்பாற்றி வாழவைத்திருக்கிறார் என்பது தெரியாது!

அப்போது ஜெர்மனியில் இயங்கிக்கொண்டிருந்த 'பழைய மொஸாட்' ஏஜெண்டுகளுக்குக்கூட ஃப்ரான்சிஸ் ஃபோலியைப்பற்றித் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர்களைப் பொறுத்தவரை, கொத்துக்கொத்தாக நிறைய யூதர்கள் ஜெர்மனியிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களையெல்லாம் பாலஸ்தீனத்துக்குக் கொண்டுசெல்வது எப்படி என்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தினார்கள்.

அங்கே பாலஸ்தீனத்திலும், யூதர்கள்மீது கருணை காட்டிய இங்கிலாந்து அதிகாரிகள் நிறையப் பேர் இருந்தார்கள். அவர்களுடைய தயவால்தான், மொஸாட் பல ஆயிரம் யூதர்களை ரகசியமாக உள்ளே கொண்டுசெல்ல முடிந்தது.

இப்படி 'மொஸாட் லிஅலியா பெட்'மூலம் உலகெங்கிலுமிருந்து பாலஸ்தீனம் வந்து சேர்ந்த யூதர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட ஒரு லட்சம். இவர்களெல்லாம் ஹிட்லர் கையில் சிக்கினால் என்ன கதியாகியிருப்பார்கள் என்று யோசித்த யூத சமூகம், மொஸாடை நன்றியுடன் பார்த்தது. மக்கள் மத்தியில் மொஸாட் வீரர்களுக்கு மரியாதை அதிகரிக்கத் தொடங்கியது

No comments:

Post a Comment